கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை சார்பில் நடைபெற்ற மின் கட்டணம் செலுத்தும் சிறப்பு முகாம்.!கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை சார்பில் சேவை கட்டணமின்றி மின் கட்டணம் செலுத்தும்  சிறப்பு முகாம் நடைபெற்றது.


நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக கூடுதல் பணம் (கமிஷன்) இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல் நாளான நேற்று 16.04.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தங்கமஹால் திருமண மண்டபம் அருகில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் மின் கட்டணத்தை சேவை கட்டணமின்றி சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது மின் கட்டணத்தை செலுத்தி பயனடைந்தனர்.

கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் கவனத்திற்கு.!

மின் இணைப்பு எண்,சென்ற மாதத்தின் தொகையை கொண்டு சென்று கூடுதல் தொகை (கமிஷன்) இல்லாமல் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று தினங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு TNTJ கிளை& GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மின் கட்டணம் செலுத்தும் இடம்: தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் கோபாலப்பட்டிணம்.

நேரம்: வாரத்தில் செவ்வாய்,வியாழன்,சனி ஆகிய மூன்று நாட்களில் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை

என்றும் சமுதாயப்பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை.
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:
9715503699,
8124150046கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments