புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்.!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்கள் சுகாதாரத் துறையால் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படுத்தப்பட்டு வரும் புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் போலீசாருக்கு கொரோனா (ஆர்.டி.பி.சி.ஆர்) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதை விரிவுபடுத்தும் நோக்கில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கொரோனா சிறப்பு பரிசோதனை மையம் வெளி நோயாளிகள் பிரிவில் முதல் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து பரிசோதனை செய்தனர். தீயணைப்பு வீரர்களுக்கு அவரது தொண்டையில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனை அடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் தற்போது தீயணைப்பு வீரர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று அறிகுறியுடன் பொதுமக்கள் இருந்தால் அவர்களுக்கும் இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments