நட்டாணி மற்றும் புரசக்குடியில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம்..!நட்டாணி மற்றும் புரசக்குடியில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றபட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா நட்டாணிபுரசகுடி ஊராட்சியில் நட்டாணி மற்றும் புரசக்குடி ஆகிய கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேற்று 11.04.2020 சனிக்கிழமை அன்று கள ஆய்வு மேற்கொண்டு சாலைகளின் ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்திருந்த கருவேல மரங்களை ஜேசிபி (JCB) இயந்திரத்தின் மூலமாக அகற்றி சாலையை விரிவுபடுத்தினர்.

கொரோனா வைரசின் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த வேளையில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு  சிறப்பாக பணி செய்து வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments