ஆலங்குடியில் கடைக்காரர்களிடம் பணம் வசூலித்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில், அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி கடை, மளிகை கடை, மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் சிலர், பணம் வாங்கிக்கொண்டு கடைகளை திறக்கவும், வாகனங்களில் செல்ல அனுமதிப்பதாகவும் மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜூக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், ஆலங்குடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரை தீவிரமாக கண்காணித்ததில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், போலீசார் கதிரேசன், சபியுல்லா ஆகியோர் முறைகேடாக நடந்து பணம் வசூலித்தது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த 3 பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஐ.ஜி அமல்ராஜ் உத்தரவிட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments