அன்னவாசல் அருகே உண்டியலில் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த அரசுப் பள்ளிச் சிறுமி.!



கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் பயிலும் 2 ஆம் வகுப்பு மாணவி தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகை ரூ.1,300 வழங்கி உள்ளார். அம்மாணவியின் சமூக அக்கறை கொண்ட கொடை உள்ளத்துக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.


கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.இதற்கான நிதிச் சுமையை சமாளிப்பதற்காக பொதுமக்கள், தொழிலபதிர்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு  முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து ரூ.140 கோடி வரையிலான நிதியினை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மதிய நல்லூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜீவிகாஸ்ரீ தனது உண்டியலில்  சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த தொகை ரூ.1,300-ஐ மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது உண்டியல் பணத்தை சமூக அக்கறையுடன் வழங்கிய அரசுப்பள்ளி  மாணவி  ஜீவிகாஸ்ரீயின் கொடை உள்ளத்தை கண்டு பொதுமக்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments