புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் பெற மே-2,3ஆம் தேதிகளில் டோக்கன்கள் வழங்கப்படும்: கலெக்டர் அறிவிப்பு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு  அவரவர் வீடுகளிலேயே  மே 2 மற்றும் 3 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என்று மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-  கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் அமலில் இருந்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு   மே 2020 ஆம் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது 1 கிலோ சர்க்கரை, 1  கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய்  மற்றும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி ஆகியவை அந்தந்த  நியாயவிலைக்கடைகளில் மே 4 ஆம் தேதி முதல் விலையின்றி வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இடையே கொரோனா தொற்று ஏற்படாத வகையில், மேற்படி அத்தியாவசியப் பொருட்களை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் வருகின்ற மே-2 மற்றும் மே-3 ஆகிய தினங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில்  குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அவர்களது நியாயவிலைக்கடைகளுக்கு சென்று    மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை மே 4 முதல் விலையின்றி சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக் கொள்ளலாம்.  நாளொன்றுக்கு ஒவ்வொரு நியாயவிலைக்கடைகளிலும் தலா 150 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன்கள்  சுழற்சி முறையில் வழங்கப்படும்.

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற நியாயவிலைக்கடைகளில் முன்னுரிமை அளிக்கபட்டு, உடன் உரிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments