புதுக்கோட்டையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு..!புதுக்கோட்டை நகராட்சியில் ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர்  உமாமகேஸ்வரி  இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தீயணைப்புத்துறையின் வாகனத்தை பயன்படுத்தி மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றையதினம் புதுக்கோட்டை நகராட்சியில் ட்ரோன் இயந்திரம் மூலம்  ஒரே நேரத்தில் 10 லிட்டர் கிருமிநாசினியை தாங்கி சென்று பரவலாக தெளிக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் நகர்பகுதி, கிராமப்பகுதி என்ற எந்த பாகுபாடுமின்றி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நலனுக்காக அவ்வப்போது தமிழக அரசால் அறிவுறுத்தப்படுகின்ற வழிமுறைகளை தவறாது கடைபிடித்து உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு  கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.

இந்த ஆய்வில் நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன், மத்திய தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் சேட் ஆகியோர் உடனிருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments