கோபாலப்பட்டிணம் இளைஞர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு சார்பில் வழங்கல்…!



கோபாலப்பட்டிணத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட கோபாலப்பட்டிணம் இளைஞர்களுக்கு வட்டாச்சியர் மூலம் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.


அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மட்டும் 28 தன்னார்வலர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.இதில் கோபாலப்பட்டிணத்தில் அதிகபட்சமாக 13 பேர் பதிவு செய்து இருந்தனர்.

அதனையடுத்து, பதிவு செய்திருந்த அனைவருக்கும் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகாமையில் வைத்து ஆவுடையார்கோவில் வட்டாச்சியர் அவர்கள் அரசின் அடையாள அட்டைகளை வழங்கினார்.இதில் அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இருந்தனர்.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் பகுதிகளில் கடைத்தெரு மற்றும் காய்கறி கடைப்பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்றும் கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை பகுதி, ஆலமரம், அவுலியா நகர், கறிக்கடை பகுதி மற்றும் மளிகைக்கடை போன்ற இடங்களை தேவையில்லாமல் மக்கள் கூடுவைதை தடுக்கும் விதமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோபாலப்பட்டிணம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுபவர்கள் விபரம்:

1.முகமது பகாத் 
2.சையது இபுறாஹிம்
3.ராஜா முகமது 
4.அசாருதீன் 
5.அன்வர் இப்ராஹீம்
6.முகமது அசாருதீன்
7.முகமது முனாஸ்
8.சல்மான் கான்

மீமிசல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுபரவர்கள் விபரம்:

1.முகமது மீராஷா
2.முகமது அப்துல்லா
3.முகமது ஹனிபா
4.சாகுல் ஹமீது
5.அபுபக்கர் சித்திக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments