கீழமஞ்சகுடி ஊராட்சி பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவும் பணி..!கீழமஞ்சகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், கீழமஞ்சகுடி ஊராட்சிக்குட்பட்ட படியங்கோட்டை மற்றும் சித்தம்வயல் ஆகிய ஊர்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் அரபு மரைக்காயர் தலைமையில் பிளீச்சிங் பவுடர் தூவும் பணி நடைபெற்றது. கிராமங்கள் முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியில் தமுமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். மேலும் வார்டு உறுப்பினர் அய்யர் மற்றும் மமக மாநில மீனவரணி  செயலாளர் ஜெகதை செய்யது ஆகியோர் உடனிருந்தனர்.


தகவல்: ஜெகதை செய்யது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments