மீமிசலில் குடும்ப அட்டைதாரர்களை நாற்காலியில் அமரவைத்து நிவாரணத் தொகை-பொருட்கள் வினியோகம்.!தமிழக ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை ரூபாய் 1,000 மற்றும் இலவசப் பொருட்கள் தமிழகம் முழுவது 02.04.2020 முதல் விநியோகம் தொடங்கியது.


ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் அரிசி அட்டைகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது.  

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சமூக இடைவெளி விட்டு, குடும்ப அட்டைதாரர்களை நாற்காலியில் அமர வைத்து, ரூ.1,000 மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் அங்கு வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில், போலீசார் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments