ஜூன் 1ஆம் தேதி முதல் 12 வரை பத்தாம் வகுப்பு தேர்வு.. கால அட்டவணை வெளியீடு.!பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை நடக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12 வரை நடக்கும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவசதிகளும் செய்து தரப்படும்.

தேர்வு அட்டவணை

ஜூன் 1 மொழிப்பாடம்

ஜூன்3 - ஆங்கிலம்

ஜூன் 5 - கணிதம்

ஜூன் 6- விருப்ப பாடம்

ஜூன் 8 -அறிவியல்

ஜூன்10 -சமூக அறிவியல்

ஜூன்12 - தொழிற்பிரிவு

பிளஸ் 2 தேர்வு

மார்ச் 24-ல் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூன் 4ல் தேர்வு நடக்கும். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ல் துவங்க உள்ளது. விடுபட்ட 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 2ம் தேதி முதல் நடக்கும்.

தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பள்ளிகள் திறப்பது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments