மீமிசலில் 37.20 மி.மீ மழை.!புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மேலும் சூறைக்காற்று வீசியது. இதேபோல மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது.


இந்த மழையில் மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள், வாழைகள் சரிந்து விழுந்தன. ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகா உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன. 

நேற்று 17.05.2020 காலை 8 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மீமிசல்-37.20, மணமேல்குடி-9, கட்டுமாவடி-6, நாகுடி-1.80, ஆவுடையார்கோவில்-10, அறந்தாங்கி-17.40, ஆதனக்கோட்டை-20, பெருங்களூர்-13, புதுக்கோட்டை-124, ஆலங்குடி-3, கந்தர்வகோட்டை-7, கறம்பக்குடி-10.20, மலையூர்-14.40, கீழாநிலை-11, திருமயம்-14.20, அரிமளம்-9, ஆயிங்குடி-2.60, இலுப்பூர்-40, குடுமியான்மலை- 14, அன்னவாசல்-70, விராலிமலை-20, உடையாளிப்பட்டி-22, கீரனூர்-61, பொன்னமராவதி-5.40, காரையூர்-3.40.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments