குடி போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் சென்ற பாம்பைக் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
40 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று முன்தினம் கர்நாடகம், டெல்லி, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் வாசலில் சில இடங்களில் பல கிலோ மீட்டர் வரிசையில் நின்று குடிமகன்கள் தங்களுக்குத் தேவையான சரக்கு பாட்டிகளை வீட்டிற்கு வாங்கிச் சென்றார்கள். சில இடங்களில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாய்ப் போனது. காவலர்கள் வந்து நிலைமையைச் சீர் செய்ய வேண்டி இருந்தது.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மதுக் கடையில் மது வாங்கிக் குடித்த இளைஞர் ஒருவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் சென்ற சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாம்பைக் கண்டதும் கோபம் அடைந்துள்ளார். நான் போதும் சாலையில் நீ ஏன் வந்தாய் என்று கூறிக்கொண்டே பாம்பைக் கடித்துக் குதற ஆரம்பித்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் பயந்து போய் அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.சிலர் அதனை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாம்பைக் கண்டதும் கோபம் அடைந்துள்ளார். நான் போதும் சாலையில் நீ ஏன் வந்தாய் என்று கூறிக்கொண்டே பாம்பைக் கடித்துக் குதற ஆரம்பித்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் பயந்து போய் அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.சிலர் அதனை வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.