இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!போடி அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த அ.தி.மு.க. நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டத்தில் உள்ள போடியை அடுத்த கோம்பை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது இரண்டரை வயது பெண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த கணேசன் (61) என்பவர் பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் திரும்ப குழந்தையை வீட்டில் விடச் சென்றபோது, குழந்தைக்கு காயங்கள் இருந்தது கண்டு விசாரிக்கவே குழந்தையை கணேசன் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிந்தது.  இதுகுறித்து தேன்மொழி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கணேசன் அ.தி.மு.க. கோம்பை பேரூராட்சியின் கிளை பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments