புதுக்கோட்டையில் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்.!புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, தெற்கு 3-ம் வீதியில் உள்ள கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி திடீர் சோதனை மேற்கொண்டார்.


அப்போது குளிர்பான கடை, ஆயத்த ஆடை கடை, துணிக்கடை ஆகியவற்றில் கூட்டம் அதிக அளவு இருந்ததும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படாததும் தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள் ஆகியோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். 

இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் ‘சீல்’ வைத்தார். இந்த சோதனையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments