பெண் நண்பரின் வீட்டு பால்கனியில் இருந்து கீழே குதித்த பாஜக தலைவர்.. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்.!ஹரியானா மாநில பாஜக செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக உள்ளவர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21-ம் தேதி சண்டிகரில் உள்ள தனது பெண் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.


இரண்டாவது மாடியில் இருந்த வீட்டின் பால்கனியில் இருந்து திடீரென துணிகளைக் கட்டி சந்தர் பிரகாஷ் கீழே இறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக துணி அவிழ்ந்துவிட, அவர் கீழே விழுந்து காலில் காயமடைந்தார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநில பாஜக தலைவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments