'10 பேருக்குச் சமைக்க ஒரே பாத்திரம்'... 'தலைமுறை கடந்த ரயிலடுக்கு'.! (வீடியோ இணைப்பு)சிவகங்கையை சேர்ந்த மதுரவல்லி என்பவரது வீட்டில் 150 ஆண்டுக்கு முந்தைய ரயிலடுக்கு அமைப்பு கொண்ட பித்தளை பாத்திரத்தை மூன்று தலைமுறையாக பாதுகாத்து வருவது காண்போரை வியப்படைய வைத்துள்ளது.

சிவகங்கை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதுரவல்லி (84). இவரது வீட்டில் 150 ஆண்டுக்கு முந்தைய பாரம்பரிய பாத்திரம் ஒன்று உள்ளது. ரயிலடுக்கு என்று கூறப்படும் இந்த பாத்திரம் 14 பாகங்களைக் கொண்டது.

இந்த பாத்திரத்தின் வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது.
இந்த தலைமுறையினர் பயன்படுத்தும் சில்வர் பாத்திரங்கள் எத்தனை மாடல் வந்தாலும், ஒரு ரயிலடுக்கு பாத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய  பாத்திரத்தை மதுரவல்லி, அவரது தாய், தற்போது மகள் மீரா மருமகள் என மூன்று தலைமுறையாக  பொக்கிஷமாக இந்த குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்

10 பேருக்கு தேவையான 3 படி அரிசியில்  சாதம் சமைக்கும் பெரிய பாத்திரம், பொரியல், கூட்டு, அவியல் செய்ய என 3 அடுக்கு பாத்திரம், சாதம் வடிக்கும் சிப்பல், குழம்புசட்டி, காபி டவரா, டம்ளர் செட், இலுப்பைச் சட்டி, செம்பு, அரிசி அளவிடும் படி, பித்தளை டம்ளர் உள்ளிட்ட 14 வகையான சிறிய பாத்திரங்கள். இந்த ஒற்றை பாத்திரத்தில் அடங்கியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments