புதுக்கோட்டையில் 8 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி.!புதுக்கோட்டை நகரில் மொ்க்கண்டைல் வங்கி நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் உள்ள தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கிக் கிளையின் நகை மதிப்பீட்டாளா், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக வங்கிக் கிளை மூடப்பட்டது. வங்கிப் பணியாளா்களும் நகை மதிப்பீட்டாளரின் குடும்பத்தினரும் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா். 

இந்நிலையில், நகை மதிப்பீட்டாளரின் மகளும், 8 வயதுச் சிறுமியுமான அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை முடிவில் உறுதியானது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 7 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments