கோபாலப்பட்டிணத்தில் கொரோனா ஊரடங்கால் நோன்பு பெருநாள் களையிழந்தது.!



கொரோனா ஊரடங்கால் நோன்பு பெருநாள் களையிழந்தது. வீடுகளில் தொழுகை நடைபெற்றது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நோன்பு பெருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் போது பள்ளிவாசல்கள் மற்றும் பொதுவான ஒரு இடங்களில் கூட்டுத்தொழுகை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரசின் பரவல் காரணமாக பொது இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் கூட்டமாக தொழுகை நடத்த வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தன.


புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வழக்கமாக சிறப்பு தொழுகை நடைபெறும் ஆலமரம் பகுதி ஈத்கா மைதானம் பூட்டப்பட்டிருந்தன.

ஊரடங்கின் காரணமாக ரம்ஜான் பண்டிகை களையிழந்தது. ஊர் மக்கள் பலர் புத்தாடை எடுக்காமல் எளிமையாக கொண்டாடினர். மேலும் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளிலில் தொழுகை நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இறைவனை வேண்டி தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் செல்போன் மூலமாகவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். வீடுகளில் பிரியாணி சமைத்து உண்டனர். மேலும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.


கொரோனா ஊரடங்கு காரணமாக பெருநாள் தொழுகை நடைபெறும் ஆலமரம் ஈத்கா மைதானம் வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீமிசல், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம்,அரசநகரிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாப்பட்டினம், கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராம்ஜான் பண்டிகையையொட்டி அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments