மீமிசல் அருகே உப்பளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.!மீமிசல் அருகே உப்பளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உப்பளம் பகுதியில் நீரில் மூழ்கி ஆண் சடலம் கிடப்பதாக மீமிசல் போலீஸாருக்கு இன்று 26.05.2020 தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.


அவர் எப்படி இறந்தார், அவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் இவரது விவரம் அறிந்தோா் 9498100779 மற்றும் காவல் ஆய்வாளர் 9498160515 ஆகிய எண்ணிகளில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படி போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments