ராமநாதபுரம் பகுதியில் த.மு.மு.க., ம.ம.க. சார்பில் மருத்துவ உதவி மற்றும் பித்ரா வினியோகம்.!புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் அறந்தாங்கி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.


உடனே அவர் ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கூலி வேலை செய்யும் தொழிலாளி என்பதால் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் நகர நிர்வாகத்திடம் மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்தார். இதையடுத்து த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான் நேரில் சென்று ரூ.15 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கினார். அவருடன் ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் அப்துல்ரஹீம், சாகுல் ஹமீது, யாசர் அரபாத், சுலைமான், முஹம்மது தமீம், அஜிஸ் கனி, அர்ஷத், ஹாஜா சுகுபுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் நகர த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், மண்டபம் பேரூர், புதுமடம், பனைக்குளம் புதுவலசை, தேவிபட்டினம், தொண்டி பேரூர், ஆனந்தூர், பரமக்குடி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் த.மு.மு.க. சார்பில் 2 ஆயிரம் ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.500 மதிப்பில் ரமலான் அன்பளிப்பு மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பில் உணவு பொருள்களும், 1500 பேருக்கு புத்தாடைகள் ரூ.5 லட்சம் மதிப்பிலும் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments