மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி நின்று இணைய தள போராட்டம் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் மீமிசல், அறந்தாங்கி, கோட்டைப்பட்டிணம் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் ஆதரவு கொடுத்துள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சியும் ஆதரவு தெரிவித்தது.
அறந்தாங்கி:
அதன்படி இன்று 31-05-2020 ஞாயிறு காலை 11.30 மணி அறந்தாங்கி மண்டிக்குளம் கரையில் சமூக இடைவெளியுடன் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலையில் வீட்டு வாசல்களில் பதாகை ஏந்தி நின்று போராட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் நாகூர் கனி கோரிக்கை கோசங்களை முன்மொழிந்தார். மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் முகம்மது ரியாஸ். மாவட்ட துணை தலைவர் முகம்மது ஆரிப், நகர மாணவரணி செயலாளர் சேக் பரீத் மற்றும் தொண்டரணிச் செயலாளர் கலந்தர் மைதீன் கியோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி நன்றி கூறினார்.
கோட்டைப்பட்டினம்:
அதன்படி இன்று 31-05-2020 ஞாயிறு காலை 11.30 மணியளவில் கோட்டைப்பட்டினம் தர்ஹா அருகில் மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றிய செயலாளர செல்லாத்தா எனும் முகமது மைதீன் தலைமையில் துணைச் செயலாளர் ரஸ்தாளி எனும் முகமது சாதிக் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மஜக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பதாகை ஏந்தி நின்று கோசங்களை முன்மொழிந்தார்கள்.
மீமிசல்:
அதன்படி இன்று 31-05-2020 ஞாயிறு காலை 11.30 மணியளவில் மிமீசல் ஸ்டேட் பேங்க் அருகில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின் தலைமையில் நடைபெற்றுது. இதில் மஜக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பதாகை ஏந்தி நின்று கோசங்களை முன்மொழிந்தார்கள்.
தகவல்:
மனிதநேய ஜனநாயக கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments