ஊர்க் கட்டுப்பாட்டால் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.360: காரைக்குடி அருகே பனங்குடி கிராமத்தில் குவியும் வெளியூர் வாடிக்கையாளர்கள்.!



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஊர்க் கட்டுப்பாட்டால் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.360 விற்கப்படுகிறது. இதனால் அங்கு வெளியூர் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.


தமிழகத்தில் அசைவப் பிரியர்கள் வாரம் ஒரு முறையாவது ஆட்டிறைச்சி வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். ஆட்டிறைச்சி விலை கிடுகிடுவென உயர்ந்தாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.

தற்போதைய நிலைமையில் ஊருக்கு தகுந்தாற்போல் குறைந்தது ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இக்காலக்கட்டத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பனங்குடியில் ஊர்க்கட்டுப்பாட்டால் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.360-க்கு விற்கப்படுகிறது.

அதுவும் உள்ளூர் நபர் என்றால் ரூ.300-க்கு கூட இறைச்சி விற்பனை செய்கின்றனர். மலிவு விலையில் இறைச்சி கிடைப்பதால் சிவகங்கை, மதுரை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பனங்குடிக்கு வருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் பனங்குடியில் ஒரே ஒரு இறைச்சி கடை மட்டுமே வைக்க கிராமமக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இறைச்சியின் விலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுவும் மிகக் குறைவாகவே உயர்த்த வேண்டுமென, கிராமமக்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இறைச்சிக் கடையை கல்லலைச் சேர்ந்த அப்துல்ஹமீது, அவரது மகன் அசாருதீன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்களது குடும்பம் 50 ஆண்டுகளாக இறைச்சிக் கடை நடத்தி வருகிறது. இவர்கள் கல்லல், காளையார்கோவில், வேப்பங்குளம், சொக்கநாதபுரம், வெற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் உள்ளன. பனங்குடியை தவிர்த்து மற்ற இடங்களில் கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments