இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்.!இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்தியாவில் மிகைத்து நிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவலில் இஸ்லாமியர்களை மையப்படுத்தி காய் நகர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என எல்லாவகைகளிலும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இவை அரபு நாடுகளின் பார்வைக்குச் சென்றது. இதற்கு அரபு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் என பலர் இந்தியாவின் இஸ்லாமிய இனவெறிக் கொள்கையை கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள்னர்.

அதுமட்டுமல்லாமல், கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் செயிண்ட் பால் நகர சபை இந்திய அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது.

மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தியாவின் இனவெறிக் கொள்கைக்கு எதிராக அமெரிக்காவில் பல நகரசபைகளும் கருத்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. சியாட்டில் நகரசபையில் முதன்முதலாக இத்தகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற நகர சபைகளிலும் இவை நிறைவேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments