புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் எலிபேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை.!மளிகை, பெட்டிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில், எலிபேஸ்ட் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளிலுள்ள மளிகை, பெட்டிக்கடைகள், சிறு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள், வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் வணிகக் கடைகளில் , எலி பேஸ்ட் போன்ற விஷத்தன்மையுடைய பொருள்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளா்களை எச்சரித்தாா்.

மீறினால் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்தாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments