கொரோனா பரவலை தடுக்க துபாய் புதிய முயற்சி..!!



கொரோனாவின் பாதிப்பையொட்டி, துபாய் நகர தெருக்களில் நடமாடும் மக்களின் வெப்பநிலையைக் கண்டறியவும், பொது இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் சமூக இடைவெளி கடைபிடிப்பதை,


பொதுமக்கள் மீறும் சமயங்களில் காவல்துறையை எச்சரிகை செய்யவும், துபாய் நகரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக துபாய் காவல்துறையின் செயற்கை புலனாய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் காலித் நாசர் அல் ரசூகி தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், தெருவில் நடந்து செல்லும் அல்லது ஷாப்பிங் மால்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பதிவு செய்ய துபாய் நகர சி.சி.டி.வி கேமராக்களில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) முறையை பயன்படுத்தி கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் துபாய் காவல்துறை ஈடுபடும் என்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துபாய் காவல்துறையினர் நடத்திய விர்ச்சுவல் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) திட்டம் ஆரம்பத்தில் குற்ற பின்னணி கொண்டவர்களை கண்டறிய பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்பொழுது வைரஸ் பரவுவதால், வெப்பநிலையையும் கண்காணிக்க கேமராவின் அமைப்பை நாங்கள் புதுப்பித்துள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கேமராக்கள் ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் பொது இடங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடையேயான தூரத்தைக் கண்டறிந்து, ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக நின்றால் எச்சரிக்கைகளை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் அல் ரசூகி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டருக்கும் குறைவாக நெருங்கி வந்தால் பாதுகாப்பு காமெராக்களில் உள்ள AI சிஸ்டம் கணினி காவல்துறையின் கட்டளை அறைக்கு ஒரு அலாரத்தை அனுப்பும் என்றும், இதனால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments