யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? யுவனின் மனைவி அதிரடி பதில்!“யுவனை முஸ்லிமாக மாற்றி வீட்டீர்களே?” என்று சமூக ஊடகங்களில் சிலர் கேட்ட கேள்விக்கு யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.


இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ,இஸ்லாத்திற்கு மாறினார். அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து ஷப்ரூன் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷப்ருன் நிஷா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் ,”யுவனை இப்படி மதம் மாற்றி விட்டீர்களே” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஷப்ருன் நிஷா, ” நான் அவரை மதம் மாற்றவில்லை அவர் இஸ்லாம் மீது பற்று கொண்டு குர்ஆனை கற்றுத் தெரிந்து எங்கள் திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார். எங்கள் திருமணம் குறித்த பேச்சு நடைபெறும் வரை அவரை நான் சந்தித்தது இல்லை. எங்கள் திருமணம் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்” என்றார்.

இன்னொருவர் ,”இளையராஜா போன்ற இந்து பக்தியாளரின் மகன் இப்படி இஸ்லாத்தை ஏற்க எப்படி அனுமதித்தீர்கள்? அவர் மனதில் விஷத்தை கல்ந்து விட்டீர்களே?” என்பதாக ஒருவர் கேட்டதற்கு, ” எப்பேற்பட்ட முட்டாள்தனத்தில் உள்ளீர்கள்? விஷம் கலப்பது என்றால் என்ன? சொல்லுங்கள், இதுபோன்ற கேள்விகள் அதிர்ச்சியாக உள்ளது. இப்போதே யுவனிடம் நேரடி கேள்வியாக ‘ஏன் இஸ்லாத்தை ஏற்றீர்கள்?’ என்று நான் கேட்கிறேன், அவரின் பதிலை சந்திக்க தயாரா?” என்பதாக அதிரடியாக பதிலளித்துள்ளார் ஷப்ருன் நிஷா.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments