மணமேல்குடி வட்டார வள மையத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான புதிய பாடநூல்கள் அறிமுகப் பயிற்சி மற்றும் கருத்தாளர்களுக்கான முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமை தாங்கி, கூட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
கற்றல் உபகரணங்கள் தயாரிப்பு
இப்பயிற்சி கூட்டத்தில், தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு குழந்தை மைய அனுபவ அடிப்படையிலும், அவா்கள் தாங்களாகவே ஆராய்ந்து அறிந்து கற்கும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழ்நிலையியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான புதுமையான கற்றல் கற்பித்தல் உபகரணப் பொருட்கள் (TLM) தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
கருத்தாளர்கள் பங்கேற்பு
இக்கூட்டத்தில் முக்கிய கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், ஆசிரியர்கள் கண்ணன், கந்தசாமி, ராமநாதன், பிரியதர்ஷினி, கர்ணன், கௌரி, ஜோதி, நிஷாந்தினி, அமிர்த லட்சுமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கற்பித்தல் அனுபவங்களையும், புதிய உபகரணப் படைப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இப்பயிற்சியின் மூலம் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் தரம் மேலும் உயரும் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.