முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது.


கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளில் வளைகுடா அதிகாரிகள் களமிறங்க வேண்டும் என்றும் கல்ஃப் நியூஸ் கோரியுள்ளது.

வளைகுடா நாடுகளில் நீண்ட காலமாக வசித்து வரும் முஸ்லிம் அல்லாதவர்கள், வளைகுடா நாடுகளுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலர் மீது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன..

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அடக்கும்றைகளை அறிந்த வளைகுடா நாட்டின் முக்கிய பிரமுகர்கள் இந்துத்வா கொள்கை கொண்டவர்களின் போக்கை கடுமையாக கண்டித்தனர். மேலும் அவர்கள் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து கவலையாகவும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் வளைகுடா நாட்டின் இந்திய தூதர்கள் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கைகளும் வெளியிட்டிருந்தனர்.

இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாகவும், அவர்கள்தான் அவர்களது எச்சில் மூலம் கொரோனாவை பரப்பினார்கள் என்ற பொய்யான தகவல்களையும் முன்னணி ஊடகங்கள் திரும்ப திரும்ப பிரச்சரம் மேற்கொண்டன. இது அரபுலக மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இதன் வெளிப்பாடாக இதுபோன்ற செய்திகளை முன்னின்று வெளியிட்ட , ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கல்ஃப் நியூஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments