112 வயதிலும் உழைத்து சம்பாதிக்கும் முதியவர் முஹம்மது அலி!ஐதராபாத்தை சேர்ந்த 112 வயது முதியவர் முஹம்மது அலி இன்று வரை உழைத்து சம்பாதித்து தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.


நிஜாமாபாத்தை சேர்ந்த முஹம்மது அலி தினமும் சைக்கிளில் இஸ்லாமிய மதம் குறித்த புத்தகங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தினமும் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்.

வீதிகள், வீடுகள் மட்டுமல்லாமல், மசூதிகளிலும் சென்று புத்தகங்களை விற்பனை செய்வது முஹம்மது அலியின் வேலை. ஆனால் அவரது வேலைக்கு மிகக் குறைந்த வருவாயே கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சமீபத்திய கொரோனா லாக்டவுனால் இவரது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பொருளாதாரத்திற்காக கஷ்டப்பட்டு வருவதாகவும் முஹம்மது அலி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments