கோட்டைப்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி போராட்டம்.!



மத்திய-மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம் நடைபெற்றது.


கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய ஊரடங்கு அரசியலை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேற்று (மே.16) அறவழி முழக்கப் போராட்டங்கள் நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முகம்மது சாலிகு (மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் முகம்மது அப்துல் காசிம் முன்னிலை வகித்தார்.

சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் குடை பிடித்து நடைபெற்ற இந்த அறவழி முழக்க போராட்டத்தில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: செய்யது இபுறாஹீம், கோட்டைப்பட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments