கந்தர்வக்கோட்டை அருகே 13 வயது சிறுமி நரபலி வழக்கில் பெண் மந்திரவாதி கைது.!



``20 வருடங்களுக்கும் மேலாக பில்லி, சூனியம் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகின்றனர். பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வசந்தியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.”


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்த 13வயதுச் சிறுமி தைலமரக்காட்டிற்குள் வைத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் பணக்காரராக ஆசைப்பட்டு தந்தையே மகளைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில்தான், போலீஸார் சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மந்திரவாதி வசந்தி என்பவரைப் பிடித்து, போலீஸார் துருவித் துருவி நடத்தியதில், சிறுமியைக் கொலை செய்ய முக்கியக் காரணமாக வசந்தி என்ற பெண் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தியை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில், சிறுமியின் தந்தை பன்னீர் செல்வம், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மந்திரவாதி வசந்தியை அணுகியுள்ளார். தனக்குப் பிறந்தது எல்லாம் பெண் பிள்ளைகள், ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்று தன் நிலை குறித்து வசந்தியிடம் கூறியிருக்கிறார். அதற்கு வசந்தி, "உன் முதல் மனைவிக்குப் பிறந்த மூன்றாவது மகளை பலி கொடுத்து, பூஜை நடத்தினால், உன் பிரச்னைகள் எல்லாம் தீரும், வீட்டில் செல்வம் கொட்டும். 

சில மாதங்களிலேயே பணக்காரர் ஆகிவிடுவாய். உடனே இதனைச் செய் என்று கூறியுள்ளார். வசந்தியின் சொல்படியே கேட்டுள்ளார் பன்னீர்செல்வம். 17ம் தேதி இரவு விடிய, விடிய பூஜைகள் நடத்தியுள்ளனர். 18ம் தேதி தந்தையே, மகளை உறவினர்களின் உதவியோடு துண்டைக் கொண்டு கழுத்தை நெறித்து துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளார்.

உதவியாளார் முருகாயி

சிறுமி வழக்கில் பன்னீர்செல்வம்தான் மகளைக் கொன்றது என்பது போலீஸார் விசாரணையில் அம்பலமான உடன், வசந்தி தலைமறைவாகிட்டார். தனிப்படையினரின் தீவிர தேடுதலில் வசந்தி கையும் களவுமாகச் சிக்கியுள்ளார். புதுக்கோட்டையில் வசித்து வரும் வசந்தி காலையில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இரவு நேரங்களில் மட்டும்தான் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். 

20 வருடங்களுக்கும் மேலாக பில்லி, சூனியம் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகின்றனர். பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வசந்தியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். வசிய மருந்து கொடுப்பது, சூனியம் வைப்பது, மாந்திரீகம் உள்ளவற்றையும் செய்து வந்துள்ளார்.

போலீஸில் சிக்காமல் இருப்பதற்குக் கூட மந்திரவாதி வசந்தி பூஜை  நடத்தி உள்ளார். ஆனால், அது எதுவும் பலிக்கவில்லை. மந்திரவாதி வசந்தி அவருடன் இருந்த உதவியாளார் முருகாயி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். வசந்தி இதுபோன்று வேறு யாரையாவது பலி கொடுக்கச் சொல்லி இருக்கிறாரா? எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments