10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.! இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்.!10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (04/06/2020) முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இன்று (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் ஹால் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 16-ஆம் தேதியில் 11- ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வு, ஜூன் 18- ஆம் தேதியில் 12- ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments