ஆவுடையார்கோவிலில் இன்று 21-ஜூன் முதல் மாலை 5 மணியுடன் கடைகள் அடைப்பு.! வர்த்தக சங்கம் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோன தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஆவுடையார்கோவிலில் உள்ள கடைகள் அடைக்க ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தகசங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.


அதன்படி இன்று 21.06.2020 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை மாலை 5 மணியுடன் மருந்து கடை, பால்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் அடைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கத்தலைவர் பொன்மாணிக்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments