புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.! கலெக்டர் தகவல்.!2020-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர, தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.


சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், பல நற்செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படவுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 
உறுப்பினர் செயலர், 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 
116-ஏ,ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நேருபூங்கா, 
சென்னை-600084 

எனும் முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 26-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்படி விருதினை பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீர,தீர செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments