மீமிசலில் மெடிக்கல் தவிர மற்ற கடைகள் இன்று முதல் மாலை 5 மணியுடன் அடைப்பு.! வர்த்தக சங்கம் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று 17.06.2020 வரும் 30.06.2020 வரை மாலை 5 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வர்த்தக சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் இன்று 17.06.2020 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தற்பொழுது பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே மீமிசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இன்று 17.06.2020 புதன்கிழமை இருந்து வரும் 30.06.2020 செய்வாய்க்கிழமை வரை மீமிசல் பகுதியில் உள்ள மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் டீக்கடைகள் மாலை 6 மணிக்கு அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் முகக் கவசம் அணிந்தும் மற்றும் அரசு சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு தரும்படி மீமிசல் வர்த்தக சங்க தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments