1 முதல் 12 வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் !!!!1 முதல் 12 வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் !!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனவே கல்லூரி முதற்கொண்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொற்றின் தாக்கம் குறையாததினால் தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்படும், ரத்து செய்ய பட்டும் வருகின்றது.

இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் அடுத்த கல்வியாண்டு குறித்த சவால்கள் அதிகளவில் உள்ளன. வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க ஏதுவாக புதிய இணையதளம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க இயலும்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments