கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: மீமிசல் வர்த்தக சங்கம் சார்பில் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு.! வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்.!மீமிசல் வியாபாரிகள் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு வர்த்தக சங்கத்தின் சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பரவி வருவதால் நாளை 25.06.2020 வியாழன் ஒரு நாள் மட்டும் பால் கடை மற்றும் மெடிக்கல் தவிர மற்ற கடைகள் அனைத்தையும் அடைக்குமாறு வர்த்தக சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் 26.06.2020 வெள்ளிக்கிழமை முதல் மதியம் 1 மணிக்குள் அனைத்து  கடைகளும் அடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை 25.06.2020 முதல் 30.06.2020 வரை அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது  மாஸ்க் அணிந்து வருமாறு வர்த்தக சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.,
ஐக்கிய வர்த்தக சங்கம்
மீமிசல்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments