புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.


புதுக்கோட்டை நகரம் வடக்கு 5ஆம் வீதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவருக்கு கடந்த மே 29ஆம் தேதி கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று 31.05.2020 ஞாயிற்றுக்கிழமை பகலில் உயிரிழந்தார்.

அவரது சடலம் உறவினர் முன்னிலையில் பாதுகாப்பான முறையில் இறுதிச் சடங்குகள் இன்றி ஞாயிற்றுக்கிழமை மாலை எரியூட்டப்பட்டது.

அவருக்குத் தொற்று ஏற்பட்ட விதம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது முதலாவது உயிரிழப்பாகும்.

16 பேர் குணமடைந்துள்ளனர். 13. பேருக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments