கோட்டைப்பட்டிணத்தில் கடைகள் இன்று முதல் 3 மணியுடன் அடைப்பு.! வர்த்தக சங்கம் அறிவிப்பு.!கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக
இன்று (28.06.2020, ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரையில் பால்கடை ,மருந்தகம், உணவகம் இவைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல், மதியம் 3 மணி வரையிலுமே செயல்பட வேண்டுமென அன்போடு அறிவுருத்திக்கொள்ளப்படுகிறது.

மேலும் முகக்கவசமின்றி வெளியில் வருவதை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வருவாய்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை போன்றவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்திடுமாறும் உங்களை அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு.
வர்த்தகசங்கம்
கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments