டெல்டா விவசாயத்திற்கு தனி மேற்பார்வை மற்றும் வழிகாட்டி குழு அமைத்திடுக அறந்தாங்கியில் நடைபெற்ற (மஜக) மாவட்ட நிர்வாக குழுவில் தீர்மானம்



மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்   மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அவர்கள் தலைமையில்  அலுவலகத்தில்  சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் முக கவசத்துடன் கலந்துக்கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. போர்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்க
கொரோனா வைரஸ் பரிசோதனையை போர்கால அடிப்படையில் ஒரு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்வதன் மூலம் நூறு சதம் வைரஸை கண்டறியவும் கட்டுபடுத்தவும் முடியும்.  எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் கொரோனா வைரஸ்  பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2. டெல்டா விவசாயத்திற்கு தனி மேற்பார்வை மற்றும் வழிகாட்டி குழு அமைத்திடுக

மேட்டூர் அனையிலிருந்து ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில்

1.கடைமடை கால்வாய் வரை தண்ணீர் வருகையை உறுதி செய்யவேண்டும்.

2.விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்களை கால தாமதம் இன்றி வினியோகம் செய்யவேண்டும்.

3.கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் விவசாய கடன் கட்டுப்பாடுகளும் கால தாமதமும் இன்றி வழங்கப்படவேண்டும்.

4.அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு உரம் வழங்கப்பட வேண்டும்..

5.பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு அலுவகங்களில் அலக்கழிக்காமல் முகாம் அமைத்து விரைவாக பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட சேவைகள் சரியாக நடைபெறுவதை கண்காணிக்கவும் விரைவுபடுத்தவும் விவசாய அனுபவமுடைய IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்கவேண்டும் என கோருகிறோம்.

தகவல்

மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் மற்றும் தொழில் நுட்பப்பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments