அரசர்குளத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி இணையவழிப் போராட்டம்.!



மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டை மாவட்டம் (கிழக்கு) அரசர்குளம் கிளை சார்பாக நேற்று 26.06.2020 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர் M. ஜாபர் அலி அவர்களின் தலைமையில்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை நிகழ்த்திய காவல்துறையினரை உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் மேலும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக இடைவெளியை பின்பற்றி இணைய வழி போராட்டம் நடைபெற்றது.

மேலும் இதுபோன்ற அத்து மீறல்களுக்கும் அநியாயங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments