நடுக்கடலில் மூழ்கிய படகு.! ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் படகுகளில் இருந்து தப்பித்தது எப்படி?



கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடந்த 22-ந் தேதி 130 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.


இவர்களில் குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமார், சேகர், சுரேஷ், பெரியசாமி ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் பழுது ஏற்பட்டு, மூழ்கத் தொடங்கியது. உடனே 4 மீனவர்களும், அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஏறி கரை திரும்பினர்.

இதே போல சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்ற வேலு, காசிநாதன், செந்தில், இளங்கோவன் ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற படகும் கடலில் மூழ்கத் தொடங்கியது. 

உடனே மீனவர்கள் 4 பேரும், குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஏறி கரை திரும்பினர். இருப்பினும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 விசைப்படகுகள், வலைகள், மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments