கறம்பக்குடி பகுதியில் ஹோண்டா சிட்டி காரில் ஆடு திருடியவர் கைது.!



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி ஹோண்டா சிட்டி காரில் தொடர்ச்சியாக ஆடுகளை திருடி வந்த இறைச்சி வியாபாரியை 6 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நெற்புகை கிராமத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி அழகப்பன்(48). இவர் மீது புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடு திருடிய பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் பின்பு அழகப்பன் திருந்தி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிலவும் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, ஏலக்காய் விடுதி, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஆளில்லாத நேரத்தை பயன்படுத்தி ஹோண்டா சிட்டி சொகுசு காரில் அழகப்பன் ஆடுகளை தொடர்ந்து திருடி வந்துள்ளார். 

இதுகுறித்து கறம்பக்குடி போலீசாருக்கு தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் அவரை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொது முடக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பார்கள் என்பதை அறிந்து வயல்களில் மேயும் ஆடுகளை தனது ஹோண்டா சிட்டி சொகுசு காரில் சென்று கடத்தி வந்து அதை இறைச்சியாக விற்பனை செய்து வந்ததாகவும் சொகுசு கார் என்பதால் தன் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் மீது கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அழகப்பனை கைது செய்த போலீசார் அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்து திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அழகப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி வருகின்றனர். அழகப்பன் மீது ஏற்கனவே ஆடு திருடியதாக புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி, திருச்சி மாவட்டம் துறையூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments