கீரனூர் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!



புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மின்னல் தாக்கி காடபிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன் மகன் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் (19) பரிதாபமாக உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் மாவட்டத்தில் புதுக்கோட்டை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் தோட்டத்திற்கு மாங்காய் பறிக்க சென்றபோது பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தமிழ்ச்செல்வன் கீரனூர் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கீரனூர் போலீசார் குளத்தூர் வட்டாச்சியர் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் கல்லூரி மாணவர் இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments