நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அரிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணைப்படி வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிக்கு யாராவது வருகை தந்தால் உடனடியாக அவர்கள் வந்த தகவலை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகம் அல்லது கிராம நிர்வாக அலுவலர் (VAO) அவர்களிடம் தெரிவித்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் மற்றும் நமது ஊராட்சியையும்  இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு..
ஊராட்சி மன்ற நிர்வாகம்,
நாட்டாணிபுரசக்குடி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments