நெஞ்சை பதறவைத்த சம்பவம் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய தமுமுக!



தஞ்சையில் மருத்துவரால் கைவிடப்பட்ட கூத்தாநல்லூரை  சேர்ந்த  நிறைமாத கர்ப்பிணி பெண் காப்பாற்றிய தமுமுக

நெஞ்சை பதறவைத்த சம்பவம்..

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேர்ந்த  கர்ப்பிணி பெண்  பிரசவதிற்க்காக தஞ்சையை சார்ந்த AKC மருத்துவமனையில் மருத்துவம் புரியும் திருபுனசுந்தரி என்ற மருத்துவர் (கூத்தாநல்லூரிலும் மருத்துவமனை அமைத்து பணி புறிந்து வருகிறார்) கூத்தாநல்லூரை சார்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்க்கு பிரசவ வலி வந்தது  உடனே அவர்கள் தான் பார்த்து கொண்டிருந்த (திருபுரசுந்தரி) மருத்துவரிடம் AKC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குலுக்கோஸ் ஏற்றப்பட்டது. 

சற்று நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு பெண்ணிண் தயாருக்கு வந்திருக்கிறது அந்த அழைப்பில் பேசிய நபர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் மருத்துவமனையில் என்று கூறியவுடன் மருத்துவரிடம் அலைபேசியை கொடுக்க சொல்லி உள்ளார் பெண்ணிண் தாயாரும் அலைபேசியை மருத்துவரிடம் கொடுத்துள்ளார் சட்டென அலைபேசியை துண்டித்த மருத்துவர் கையில் ஓடிக்கொண்டிருந்த குலுக்கோஸை பிடுங்கி எடுத்துவிட்டு நிறைமாத கர்பிணியிடம் நீங்க இங்கிருந்து கிளம்புங்க வெளிய போங்க என்று மருத்துவமனையை விட்டு விரட்டி அடித்துள்ளார் எவ்வளவோ கெஞ்சியும் காதில் ஏந்தாமல் எந்த காரணமும் சொல்லாமல் அவர்களை விரட்டி அடித்துள்ளார். 

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அந்த பெண்ணும் அவருடைய வயதான தாயார் மற்றும் தகப்பனார்  அங்கு இங்கும் அழகளிக்கப்பட்டு இறுதியாக ஆட்டோவில் ஏறி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் உள்ளே எப்படி செல்வது என்று கூட தெறியாமல் பரிதவித்து கர்பிணி பெண்ணோடு நடு ரோட்டில்  பேருந்து நிலையத்தில் அமர்ந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் தகவலறிந்த கூத்தாநல்லூர் தமுமுக & மமக நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா அவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். 

தகவல் அறிந்த தமுமுக - மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா மற்றும் தஞ்சை மாநகர தமுமுக துணை செயலாளர்கள் முகம்மது ரசூல், அமீர் ஜான், மன்சூர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று மனிதாபிமானமில்லாத ஒரு கொடூர செயல் அறங்கேறி இருப்பதை கண்ட தமுமுக சகோதர்ர்கள் தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை   வரவழைத்து அந்தப் பெண்ணை உடனடியாக ஏற்றி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மேலாளர் ஜேம்ஸ் அவர்களை மாநிலச் செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா தொடர்புகொண்டு நடந்த விஷயங்களை விளக்கினார் உடனே மருத்துவமனையின் மேலாளர் ஜேம்ஸ் அவர்கள் உடனடியாக அழைத்து வருமாறு கூறினார். உடனே தமுமுகவின் உடைய தொண்டர்களோடு தமுமுக ஆம்புலன்ஸில் சென்ற சகோதரி பரிசோதிக்கப்பட்டு பின்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகம் தாய் அதிக பதட்டத்தில் இருப்பதாக  விவரித்த மருத்துவர்கள் பிறகு அப்பெண்ணிற்கு கொரோனோ தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

 உடனடியாக அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு மீனாட்சி மருத்துவமனையினுடைய அவசர ஊர்தியில் உடனடியாக திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தாயுள்ளத்தோடு அனுப்பி வைக்கப்பட்டார்.  இத் தகவலை உடனடியாக  தமுமுக - மமக  திருவாரூர் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்களிடத்தில் மாநிலச் செயலாளர் I.M.பாதுஷா விலக்கினார் உடனடியாக அங்குள்ள சகோதரர்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டனர்.

 திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டுர் பைசல் , மமக மாவட்ட து.செயலாளர் ஜெகபர் அலி , கூத்தாநல்லூர் முன்னாள் நகர து.செயலாளர் ஜான் முகமது , கூத்தாநல்லூர் ITP அமீரு தீன் ஆகியோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டு  உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு தேவையான வசதிகள் செய்து மேலும் உணவு உடைகள் வெளியில் இருந்து கொடுக்க  ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு நேற்று இரவு 26-06-2020 ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் சேய்வும் நலமாக இருப்பதாகவும் உதவி செய்த தமுமுக & மமக நிர்வாகிகளுக்கு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.



அந்த பெண் விரைவில் குணமடைய இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்...

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

தகவல் 

தமுமுக & மமக
ஊடகப்பிரிவு
திருவாரூர் மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments