சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த 30 பயணிகள்.. தனியார் ஹோட்டலில் தங்க மக்கள் எதிர்ப்பு





        சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த 30 பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் துபாய் இமான் சங்கம் ஏற்பாட்டில் இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 5.15மணிக்கு சார்ஜாவில் இருந்து 169 இந்தியர்களுடன் ஒரு விமானம் திருச்சி வந்தடைந்தது.

அவர்கள் அனைவருக்கும் விமானம் வளாகத்தில் மருத்துவ குழுவினரால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இமான் சங்கம் ஏற்பாட்டில் அவரது அவரது சொந்த செலவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைப்பதற்கு பஸ்களில் மூலம் தனிமைப்படுத்த கொண்டு சென்றார்கள்.

ஒரு பகுதியினர் மத்திய பேருந்து நிலைச அருகே உள்ள அண்ணாமலை தனியார் நட்சத்திர ஓட்டலில்களில் தங்க வைத்து தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் விதிமுறைப்படி அவர்களில் 30 பேர் விமான நிலையத்தில் இருந்து ஒரு பஸ்சில் ஏற்றி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த பஸ் குறிப்பிட்ட ஓட்டல் முன் வந்து நின்றதும் வெனிஸ் தெரு, காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு அனுமதிக்க கூடாது.

அவர்களால் இப்பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன் அங்கு வந்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து அந்த பயணிகள் 30 பேரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு பெருபரபரப்பு ஏற்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments