அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில் புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா.!



அறந்தாங்கி மண்டிக்குளம் மற்றும் மணிவிளான் பகுதியில் குறைந்தது இரண்டாயிரம் மக்கள் தங்களின் அவசர போக்குவரத்துக்கு ஆட்டோவை அழைக்க தொலைவில் உள்ள ஸ்டாண்டுக்கு தொடர்புக்கொள்ளும் நிலை இருந்துவந்தது.


இந்நிலையில் மக்களுடைய கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் மண்டிக்குளம் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அறந்தாங்கி மண்டிக்குளம் 20 ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் 3594/CNI சங்கம் பெயர் பலகையை இன்று 27.06.2020 மஜக மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் சட்ட ஆலோசகர் அட்வகேட் நோட்டரி பப்ளிக் K.S ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.


மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ஆட்டோ ஒட்டுனர்கள் சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

தலைவர் முகம்மது ராவுத்தர், பொருளாளர் யாஸின், துணை தலைவர் வெள்ளைச்சாமி, துணைச் செயலாளர்கள் ஜலாலுதீன், நைனா முகம்மது, சரவணன், அறந்தாங்கி நகர தொழிற்சங்க தலைவர் சோலை மலை, நகர துணைச் செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் முஜி, சீனிவாசன், கலந்தர் மைதீன் உள்ளீட்ட ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments