கொரோனா பாதிப்பால் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மரணம்.!கொரொனா பாதிப்பால் ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்.

40 வயதான அவர், கொரோனா தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஊடக துறையில் இருந்து மரணம் அடையும் முதல் பத்திரிகையாளர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments